tamilnadu epaper

செல்லுக்குள்ளே இருக்கிற பிள்ளைகளா

செல்லுக்குள்ளே இருக்கிற பிள்ளைகளா


செல்லுல இருக்குறப் பிள்ளைகளே.. சிந்திச்சு வெளியில வாருங்களே!


துள்ளுற வயசுலே பிள்ளைகளே.. தூண்டிலில் விழுந்த மீனுகளே..


தொட்டா விடாது செல்லு.. தம்பி தொடாம தூரமாய் நில்லு..


கெட்டால் இயங்காது செல்லு.. கெடாமல் கொஞ்சம் நீ தள்ளு..


வலைக்குள்ளே வக்ர விளையாட்டு.. ஆடாதே அதுக்குள்ளே போடாதே துட்டு..


உலைவைத்துப் பிழைக்கின்ற பிழைப்பு அதுதானே செல்போனின் அழைப்பு


குழிக்குள்ளே விழுந்தது போதும் .. இன்றே கையூன்றி எழ வேண்டும் நீயும்..


அறிவியல் எரிகின்ற தீபம்.. 

திருக்குறளை அதில் படித்தால் போதும்..


கைப்பேசி அதுதாண்டா செல்லு.. கையாளு நல்லதற்கே பயன்படுத்து வெல்லு.!


-வே.கல்யாண்குமார்