tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் சிறப்பு பகுதி

எங்கள் குலதெய்வம் சிறப்பு பகுதி

*எங்கள் குலதெய்வம் 'திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சிறப்பு:-
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த வைணவ திருத்தலம் செங்கமவல்லி தாயார் சமேத ராஜகோபாலசுவாமி திருக்கோவில் ஆகும்.
* இத்திருத்தலம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் திருக்கடையூர் லிருந்து ஆறாவது கிலோமீட்டர் தெற்கிலும்..தரங்கம்பாடி யிலிருந்து ஐந்தாவது கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
*     திருக்கடையூர் ..சிங்கனோடை..காழியப்பநல்லூர்..சாவடிக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் அனந்தமங்கலம்.பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அலங்கார தோரணவளைவு வரவேற்க...கிழக்கே செல்லும் சாலையில் அரைகிலோமீட்டர் நடந்தால் திருக்கோவிலை அடையலாம்.
*     ராஜகோபால சுவாமி கோவில் நுழைவுவாயில் மொட்டைக்கோபுரமாகவே உள்ளது.வாயிலை அடுத்து பலிபீடம்..கொடிமரம்..கருடாழ்வார் சன்னதி..ஆகியவை உள்ளன.
*    தென்கிழக்கில் திருமடப்பள்ளியும் அதனருகில் தாயார் சன்னதியும் இருக்கின்றன.
*    கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்று பின்பே திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும் என்பதே ஐதீகம்.பிரதான திருக்கோவில் கருவறையில் மூலவர் பநீதேவி பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார்.இந்த மூலவர் அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள் ருக்மணி-சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார்.
*    இத்திருக்கோவிலில் வடக்கு நோக்கிய தனி சன்னதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
* சன்னதிக்கு எதிரே திருக்குளம் இருக்கிறது.
*    இச்சன்னதியில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சநேயர் மூன்று கண்கள்..பத்துக்கரங்கள்..அக்கரங்களில் சங்கு..சக்கரம்..வில்..அம்பு..சூலம்..மழு..
* கபாலம்..சாட்டை..நவநீதம்..பாசம்..
* அங்குசம் போன்ற ஆயுதங்களை ஏந்தியும்.‌முதுகில் இருபுறமும்  கருடனுடைய சிறகுகளைக்
* கொண்டும் காட்சி தருகிறார்.
*   இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் வேறெங்கும் இல்லை என கூறப்படுகிறது.
*    இனி இத்தல வரலாற்றை காண்போம்..
*   இலங்கையில் யுத்தம் செய்து இராவணனை அழித்து..சீதையை மீட்டுக்கொண்டு ராமர்.சீதா..
* லட்சுமணர்..அனுமன் ஆகியோர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு திரும்பினர்.
*     வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர்.
* அப்போது அங்கு வந்த நாரதர் ராமனிடம் .
* .'ராவணன் அழிவுக்கு பின்னரும்..
* அரக்கர்கள் ஓரிருவர் அங்காங்கே தங்கி இன்னல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.அவர்களில் இரக்தபிந்து..இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிகக்கொடியவர்கள்.இப்போது அவர்கள் ஆழ்கடலுக்குள் பதுங்கி கடுந்தவம் செய்து..வரம் பெற முயற்சிக்கிறார்கள்.
*    அப்படி வரம்பெற்றுவிட்டால் ...ராவணனைவிட பன்மடங்கு ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வர்.எனவே உலக உயிர்களின் நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும்'என கேட்டுக்கொள்கிறார்.
*     இதை ஏற்று ராமர்...அரக்கர்களை அழிக்க மாவீரரான அனுமனை பணித்தாராம்.
* அனுமனோ அழியாவரம் பெற்றவர்..
* அளவில்லா ஆற்றல் உடையவர்..
* இருப்பினும்..அரக்கர்களுடன் சமர் புரிய திருமால் சங்கு சக்கரத்தை அளிக்க..பிரம்மனோ தனது பிரம்ம கபாலத்தை வழங்க..ருத்ரன் மழுவையும்..ராமன் வில்-அம்பையும் ...
* இந்திரன் வஜ்ராயுதத்தையும்..வழங்கினர்.
*    இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை பத்துக்கரங்களில் ஏந்தி ஆஞ்சநேயர் காட்சியளிக்க..கருடாழ்வார் தமது சிறகுகளை தந்து வாயு புத்திரனுக்கு வலிமையூட்டினார்.
*     கடைசியாக வந்த சிவனோ தான் தருவது யாது என திகைத்து..தனது மூன்றாவது கண்ணை அளித்து ஆசிர்வதித்தார்.
* 3 கண்கள்(திரிநேத்ர)
* 10கரங்களுடன்(தசபுஜ)புறப்பட்டு சென்று கடலுக்கடியில் தவம் செய்துகொண்டிருந்த இரு அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை அழித்துவிட்‌‌‌டு ராமரை சந்திக்க வருகிறார்.
*    வரும்வழியில் கடற்கரையோரத்தில் ஒரு சோலையைக்காண்கிறார்.
*    ஆனந்தமிகுதியோடு இவ்விடத்தில் இளைப்பாருகிறார்.அவ்விடமே ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு..மறுவி அனந்தமங்கலமாகிய இத்தலம் என்பது வரலாறு.
*    இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால்..திருமால்..சிவன்..பிரம்மன்..ருத்ரன்..இந்திரன்..கருடாழ்வார்..ராமர் என்று அனைத்து தெய்வங்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
*     சிரஞ்சீவியான அனுமனை வழிபட நீண்ட ஆயுள்..உடல் வலிமை..புத்திக்கூர்மை‌‌ பெறலாம்.அச்ச உணர்வு...நவகிரக தோஷங்கள்...மனசஞ்சலம்..தீராப்பிணிகள் விலகும்..வாக்கு வன்மை வளமாகும்.
*    அனந்தமங்கலம் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வணங்க காலநேரம் பார்க்க வேண்டியதில்லையாம்.இருப்பினும் இங்கு சனிக்கிழமைகள்..அமாவாசைகளிலும்...மூலநட்சத்திரத்தில் வரும் அமாவாசை தினமும் வழிபட சிறப்பு என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
*    அனுமன் ஜெயந்தி..வைகுண்ட ஏகாதசி தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
*   அப்படி சிறப்பான நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் வடக்குபிரகாரத்தில் கிழக்குநோக்கிய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் சடாரி சாற்றி...துளசித்தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.
*     இத்தலத்திற்கு 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த 21-1-2024 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
*     இத்திருத்தலத்தில் கடந்த 1978ம் ஆண்டு வெங்கலத்தால் ஆன ராமர்.. சீதை..லட்சுமணர்..அனுமன் சிலைகள் திருடு போயின.இந்த சிலைகள் சிங்கப்பூரில் இயங்கிவரும் 'பிரைடு இந்தியா' என்கிற தன்னார்வ நிறுவனத்தின் முயற்சியால்..இந்தியதூதரகம் வழியாக லண்டனிலிருந்து  மீட்கப்பட்டு ..கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தது..அப்படி மீட்கப்பட்ட ராமர்..சீதை..லட்சுமணர் சிலைகள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது.ஆனால் அனுமன் சிலை மீட்புக்கான முயற்சிகள் இன்னும் நீண்டுகொண்டே இருக்கின்றன.
              ஆஞ்சநேயருக்கு துளசிமாலை...வெற்றிலை மாலை..வடைமாலை...எலுமிச்சை மாலை உகந்தவை.
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட..நம் துன்பங்கள் வெப்பம்பட்ட வெண்ணெய் போல கரைந்தோடும் என்பது நம்பிக்கை.ஆனந்த வாழ்வுக்கு அடித்தளமிட்டு ஆஞ்சநேயபகவானை வழிபட்டு நலம்பெற..அனைவரும்ஒருமுறை சென்று வரலாம்.!.அருள் பெறலாம்.!*
------------------------
அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை