tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் சிறப்பு

எங்கள் குலதெய்வம் சிறப்பு

 

 மயிலம் முருகன் கோவில் 

 

மயிலம் என்ற இந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் பாண்டிச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் ஒரு குன்று அமைந்துள்ளது அந்த குன்று கோவிலுக்கு பெயர்தான் மயிலம் முருகன் கோவில்.

 

இந்தக் கோவிலின் மூலவர் முருகன் சுப்ரமணிய சுவாமி.

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோவில் என்றும் சொல்லப்படுகிறது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலம் என்ற ஊரில் உள்ள சிறிய மலையை அமைந்த இந்த கோவில் சோழமண்டல கடற்கரையில் உள்ள கிராமத்தோடு பின்னி பிணைக்கப்பட்ட ஒரு அற்புதமான கோவில். இந்த கிராமம் அந்தணர்களுக்காக நன்கொடை கொடுக்கப்பட்டதாக சாத்திரங்கள் சொல்கின்றன.

 

அரக்கன் சூரபத்மனின் கொடூரமான ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வந்ததில் தல வரலாறு தொடங்குகிறது சூரபூரணரின் கூற்றுப்படி சூரபத்மா முருகனுக்கு எதிரான அசுரமயோபாய

தந்திரங்களையும் எல்லாம் பயன்படுத்தி மிகக் கடுமையாக போராடியும் தோல்வியுற்றார். இதன் பிறகு சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாக புராணங்கள் சொல்கின்றன .

 

கண்ணீர் மல்க நாம் வேண்டிக் கொண்டாலே இறைவன் நிச்சயம் மனம் இறங்குவார். அதனால் கண்ணீருடன் வேண்டியதால் மனமிறங்கிய முருகக்கடவுள் மயிலை மலை அருகே வராக ஆற்றங்கரையில் மயில் உருவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன மேலும் சூர பத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும்போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக எழுந்து அருள் புரிய வேண்டும் எனவும் அவரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் புராணக் கதைகள் சொல்கின்றன.

 

சூர பத்மனின் இந்த ஆசைக்கு இணங்கிய முருகப்பெருமான் அங்கு நிரந்தரமாக மலையில் இருப்பதாக தல வரலாறுகள் சொல்கின்றன மழையின் உச்சியில் உள்ள கோவிலில் பொம்மையாபுரம் மடாதிபதி அவர்களால் சிறப்பான அளவில் கட்டப்பட்டுள்ளது. அதன் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தை கவனித்து மிக அற்புதமாக நடத்திக் கொண்டு வருகிறது.

 

 

Cell - 9840410028

ராஜேஸ்வரி பரதன்

சென்னை 33