சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த தாயமங்கலம் என்கிற சிற்றூர்.
இந்த ஆலயத்தில் தான் முத்து மாரியம்மன் மிகச் சிறப்பு அம்சமான ஆலயம் உள்ளது. இதன் வரலாறு என்னவென்றால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரத்து வணிகர்கள் தங்களது விடை பொருட்களை பாண்டிய நாட்டு தலைநகரான மதுரையம்பதிக்குஎடுத்துச் சென்று வணிகம் செய்து வந்தார்கள். முத்துச் செட்டியார் என்பவர் இவ்வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் மீனாட்சி அம்மனிடமும் சொக்கநாதரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். மதுரையில் தன் வேலை முடித்து திரும்பும்போது தவறாது மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவது அவரது வழக்கமாய் இருந்தது. அவர் செல்வந்தராக இருந்தும் அவருக்கு ஒரு மகப்பேறு இல்லை என்கிற கவலை உள்ளுக்குள் இருந்தது.
முத்து செட்டியார் ஒரு நாள் மதுரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது சின்ன மண்ணூரில் ஒரு பெண் குழந்தை தனியே அழுது கொண்டிருந்ததை கண்டார் அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை வாரி அணைத்துக்கொண்டவர் அருகில் யாரும் இல்லாததை கண்டு குழந்தை க்குரிய வரை யாரும் காணப்படாததால் அன்னை மீனாட்சி தன்மேல் இரக்கம் கொண்டு குழந்தையை தனக்காகவே அனுப்பி உள்ளதாக எண்ணி தானே கூட்டிக்கொண்டு போக எத்தனித் தார் குழந்தையை கூட்டிக்கொண்டு வரும் வழியில் ஒரு ஆற்றைகண்டவர் ஆற்றின் கரையில் குழந்தையை இருக்க செய்துவிட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கினார் குளித்து முடித்து திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை சுற்றும் முற்றும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை வேறு வழி தெரியாமல் வீடு சென்றவர் தன் மனைவியிடம் நடந்த விவரத்தை கூறி வருந்தினார்.அன்றுஇரவுஉணவுகூட உண்ணாமல் உறங்கச் சென்றார்.அ
னார்.அன்றுஇரவுஉணவுகூட உண்ணாமல் உறங்கச் சென்றார்.அப்போது கனவில் அக்குழந்தை வந்து தான் கள்ளிக்காட்டில் உறைவதாகவும் அவ்விடத்தில் தனக்கு சிலை வைத்து வழிபடவும் தெரிவித்தது. குழந்தையை போல் சுமந்து சென்ற போது அக்குழந்தை அவரிடம் அவர் பெயருடன் அம்மன் பெயரையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதால் அம்மனுக்கு முத்துமாரி என பெயரிடப்பட்டது குழந்தையை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆற்று மணலை கொண்டு அம்மன் சிலை செய்யப்பட்டு கூரைவேயப்பட்ட ஒரு சிறு கோவிலுக்குள் வைத்து வணங்கப்பட்டது.
இந்த அம்மனை வழிபடுபவருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. வசதி படைத்தவர்களிடமிருந்து
நன்கொடையாள் கோவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கருங்கல்லாலான அம்மன் சிலை 1914 இல் உருவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தை ஏழுதலைமுறையாக முத்துச் செட்டியார் வழிவந்தவர்கள் பராமரித்து வருகின்றனர்.இந்த ஆலயமானது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
இந்த முத்து மாரியம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இன்ன பிற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கையான உண்மை.
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.
முகவரி:
45.வடக்கூரம்மன்கோவில்தெரு
மணமேல்குடி-614620
புதுக்கோட்டை-மாவட்டம்.