தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள எங்கள் குல தெய்வமான படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர்.திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து பேச்சியம்மன் சன்னதியும் உள்ளது மேலும் வடபகுதியில் பச்சை காளியம்மன் சன்னதியும் உள்ளது.மாரி என்றால் மழை எனப்பொருள் கொள்ளும், அதுபோல் அவ்வாலயத்தில் அமர்ந்திருக்கும் படைவெட்டி மாரி அம்மன் மழையைத் தருபவள் எனவும் அழைக்கப்படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர்.நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள் அகலும். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.
மாரி என்றால் மழை. ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப் படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள்.
பொங்கல் வைத்தல், நீர்க்கஞ்சி வார்த்தல், பாற்செம்பு எடுத்தல், கன்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது. இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள் அகலும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.
மாரியம்மன் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.