இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில்
தொண்டி யிலிருந்து 15கிலோ
மீட்டர் தொலைவில் திருவெற்றியூர்
எனும் கிராமத்தில் இந்த ஆலயம்
அமையப்பெற்றுள்ளது.பெறும்பாலும் ஊர் பெயரை யாரும் உச்சரிப்பில் லை பாகம்பிரியாள்
கோவில் என்றேதான் அழைக்கப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத் தலமாகும் இந்த ஆலயத்தில்
பக்தர்கள் வியாழக்கிழமை இரவு
தங்கி வெள்ளிக்கிழமை காலை
கோயில் முன்பு உள்ள வாசுகி
தீர்த்தத்தில் நீராடி பாகம்பிரியாள்
உடனுறை பழம்புற்றுநாதர் எனும்
வன்மீகநாதரை வழிபடுவதால்
தோல் நோய் மற்றும் விஷக்கடி கள்
விலகும் என்பதுதொன்மையான
நம்பிக்கையாகும்.
திங்கள் .செவ்வாய் .வியாழன்
வெள்ளி ஆகிய நாட்கள் அம்பாளை
வழிபட சிறந்த நாட்களாகும்.
திருமணம்.குழந்தைபாக்கியம்
உடல் ஆரோக்கியத்திற்கு இத்தலம்
சிறந்ததாகும்.
திருமணதோசம் உள்ளவர்கள்
வில்வமரத்தடியில் உள்ளபுற்றடி
விநாயகருக்கு பாலபிஷேகம்
செய்து அருகில் உள்ள நாகருக்கு
மஞ்சள் கயிரை மரத்தில் கட்டி
வழிபட்டுச் செல்கிறார்கள்.
தீராத நோய்களை தீர்ப்பதால்
அம்பாள் பாகம்பிரியாளை
மருத்துவச்சி என்றும் பக்தர்கள்
பாசத்தோடு அழைப்பது முண்டு.
இந்த அம்பானி சக்தியை என் வாழ்வும் அனுபவித்து வந்துள்ளேன் இது கற்பனை அல்ல நிஜம் எனது முடியை காணிக்கை செலுத்த வேண்டி இருந்தேன் ஒருநாள் அதற்கான ஏற்பாடுகளோடு புறப்பட தயாராகிவிட்டேன் ஆனால் எனக்குள் ஒரு எண்ணம் அம்பாளும் சக்தியை தெரிந்து கொள்ள. அதனால் இன்னொரு நாள் செல்லலாம் என பயணத்தை தள்ளிப் போட்டேன் அதன் பிறகு தான் சோதனை ஆரம்பித்தது அன்று இரவே கனவில் ஐந்து தலை நாகம் என் தலைமாட்டில் படம் எடுத்தபடிநின்றது திடுமென. விழிப்பு வந்து உட்கார்ந்து விட்டேன் சரி கனவு தானே என்று விட்டுவிட்டேன்
மறுநாள் மாலை 6 மணி இருக்கும் நல்ல பாம்பு ஒன்று நிஜமாகவே வீட்டிற்குள் நுழைந்து விட்டது அதனை வீட்டில் உள்ளோர் அடித்து அதற்கான சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர் நான் வீட்டுக்கு வந்ததும் விவரத்தை சொன்னார்கள் சரி இது அம்பாளியின் விளையாட்டு தான் என நினைத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றேன் எனக்கு குறுக்கே பெரிய நல்ல பாம்பு ஒன்று சட்டென பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனது எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது அந்த தடையையும் மீறி படுக்கலாம் என்று சென்றபோது குறுக்கே பெரிய நட்டுவாக்கிளி ஒன்று இருந்ததை இழுக்கிட்டு போய் இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று நினைத்து மறுநாளே புறப்பட்டு விட்டேன் ஆலயம் சென்று அம்பாளுக்கு முடியை காணிக்கை செலுத்திய பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது அப்படி ஒரு சக்தி படைத்த தெய்வம் தான் பாகம்பிரியாள்
ஆலயம்
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.
முகவரி:
45.வடக்கூரம்மன்கோவில்தெரு
மணமேல்குடி_614620
புதுக்கோட்டை_மாவட்டம்
அலைபேசி:7010746996