tamilnadu epaper

எங்கள் குல தெய்வம் ஊத்தங்கரை ஶ்ரீமகா முனியப்பன் கோவில் சிறப்பு:

எங்கள் குல தெய்வம் ஊத்தங்கரை ஶ்ரீமகா முனியப்பன் கோவில் சிறப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீமகா முனியப்பன் ஆலயம்.

 

ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு தினமான ஆடி 18 க்கு பிறகு வரும் செவ்வாய்கிழமையில் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். 

 

அதிகாலை முதலே விநாயகருக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரம் நடைபெறும். பிறகு மகா முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்பு அலங்காரமும் நடைபெறும்.

 

எங்கும் இல்லாமல் இங்கு இரட்டை முனியப்பன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

மேலும் அன்றைய தினத்தில் பக்தர்கள் ஆணி செருப்பு அணிந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். முனியப்பனுக்கு வேண்டுதல் வைத்து வேல் போன்றவைகளை எடுத்து வந்து மகா முனியப்பனுக்கு சாத்துகிறார்கள்.

 

அன்றைய தினம் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 

 

நீண்ட தூரம் கனரக வாகனங்களில் பயணம் செய்பவர்கள் முதலில் மகா முனியப்பன் கோவிலுக்கு வந்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு பிறகு எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி சுற்றி விட்டு பிறகுதான் வாகனத்தை இயக்குவார்கள்.

 

நீண்ட தூரம் செல்வதால் எந்த அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்று எண்ணி மகா முனியப்பனை தரிசனம் செய்து பிறகுதான் செல்வார்கள்.

 

அந்தளவிற்கு மகா முனியப்பன் எல்லை காவல் தெய்வமாகமும் பில்லி சூனியம் ஏவல் போன்றவைகளை தடுக்கும் வல்லமை நிறைந்தவராகவும் உள்ளார்.

 

ஒவ்வொரு வருடமும் முப்பூசை எனும் பூஜை செய்து ஆடு, கோழி, பன்றி ஆகியவைகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.

 

இந்த மகா முனியப்பனை தரிசனம் செய்தால் வீட்டில் உள்ள செய்வினை, சூனியம் போன்றவைகள் முற்றிலும் அகலும்.. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

 

ஊத்தங்கரை பேருந்து நிலையத்தித் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் 500 மீட்டரில் இடது புறமாக ஶ்ரீமகா முனியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

 

    - வெ.ராஜம்மாள்,

கீரைப்பட்டி, அரூர், தருமபுரி - 636903.