tamilnadu epaper

எங்க குல தெய்வம் அகலிகை சாபம் தீர்த்த சாஸ்தா கோவில்

எங்க குல தெய்வம் அகலிகை சாபம் தீர்த்த சாஸ்தா கோவில்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள 

சிதம்பரபுரம் மலை அடி வாரத்தில் அழகிய இயற்கையான சூழ்நிலையில் அமைந்து உள்ளது எங்க குல தெய்வம் அகலிகை சாபம் தீர்த்த சாஸ்தா கோவில் முன்னொரு காலத்தில் ராமர் அகலிகைக்க் சாபம் நிவர்த்தி செய்த இடமாக கருதுவதால் இந்த பெயர்பெற்றது இக் கோயில் பல தலைமுறைகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது காண்போரை கொள்ளை கொள்ளும் அழகிய இயற்கையான மூலிகை காடுகள் நிறைந்த வன பகுதியில் அமைந்துள்ளது சிறப்பானதாகும் இங்கு சாஸ்தாவுடன். விஸ்வாமித்திரர் ராமர் லட்சுமணர் சீதையை பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் பட்டாபிஷேகம் அழைத்து செல்லும் காட்சியை விவரிக்கும் சிலைகள் உள்ளன. அருகில் இந்திரன் சாபம் பெற்று உடல் முழுக்க கண்கள் நிறைந்த படி உள்ள பெரிய சிலை உள்ளது இங்கு பங்குனி உத்திரம் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி சனி அன்று அன்னதானம் நடைபெறும் இந்த கோவில் அருகே கௌதம நதி செல்கிறது எல்லோருக்கும் அவர்கள் நினைத்த காரியத்தை நிறவெறி தரும் அற்புத சக்தி வாய்ந்த கோவில் ஆகும் தினசரி பூஜை நடை பெறுகிறது காலை 9 மணி முதல் மூன்று மணி வரை நடை திறந்து இருக்கும். விசேட நாட்களில் கூடுதலாக திறந்து இருக்கும் மலை காட்டு பகுதியில் உள்ளதால் இரவு நேர பூஜை கிடையாது. பங்குனி உத்திரம் மற்றும் விசேட நாட்களில் மட்டும் கூடுதலாக திறந்து இருக்கும் இந்த இடம் வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. களக்காடு பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலம் சென்று வரலாம். சொந்தமாக வாகனம் வைத்து இருப்பவர்கள். காலை 9 மணிக்கு சென்று மதியம்

மூன்று மணி வரை இருந்து விட்டு வரலாம்

அங்கு ஒரு வேளார் பூஜை பணியில் இருக்கிறார் அவரை மொபைலில் தொடர்பு கொன்று கோவிலுக்கு சென்று வரலாம் கோவில் பூசாரி. தொடர்பு எண். 

9791619539

இந்த கோவிலை ஹரிஹர புத்திர சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள்

மிகவும் தொன்மையான 

பழமைவாய்ந்த சிறப்பான 

கோவில். இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மன நிம்மதி ஆரோக்கியம் கிடைக்கும்

 

நடேஷ் கன்னா

 42 ரெயில்வே லைன் தெரு 

கல்லிடைக்குறிச்சி. 627416