tamilnadu epaper

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: ஸ்டாலின் பெருமிதம்

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தேர்ச்சி   விகிதம் அதிகரிப்பு: ஸ்டாலின் பெருமிதம்


சென்னை, மே 20–

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. 2021– -22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2024–-25ல் 96% ஆக உயர்ந்தது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-– 22ல், 78% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2023-–24ல் 92% ஆக அதிகரித்துள்ளது. 

இந்த தேர்ச்சி விகிதம் சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு: 

 கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.