tamilnadu epaper

எட்டயபுரம் அருகே, கீழஈரால் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்

எட்டயபுரம் அருகே,  கீழஈரால் ஊராட்சியில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்



G.V. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32-லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.20-லட்சம் மதிப்பீட்டில் ஊரணி ஓடையில் சிறிய பாலம் கட்டுவதற்கும், ரூ.45-லட்சம் மதிப்பீட்டில் கற்சாலை அமைக்கவும்,

ரூ.9-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ

கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.