பெங்களூரு:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், விராட் கோலி தனது 53-வது ரன்னை கடந்தபோது ஐபிஎல் தொடரில் 8,500 ரன் குவித்த முதல் வீரரானார்.
விராட் கோலி இதுவரை 263 போட்டிகளில் விளையாடி 8 சதம், 62 அரைசதம் உள்பட 8,509 ரன்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இரு இடங்களில் ரோகித் சர்மா 267 போட்டிகளில் விளையாடி 6,921 ரன்னும், ஷிகர் தவான் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்னும் எடுத்துள்ளனர்.