கருமேகங்கள் கலைந்திடத்தான்
கனமழையது கொட்டிடும்
நீரோடும் தடங்களைத்தான்
யாரோ சிலர் ஆக்கிரமிக்க
போராட்டம் ஆகின்றது
பொதுமக்கள் பிழைப்பிங்கே
பெருகிடும் மக்கள்தொகை
விரிவாக்குது நகரத்தை
நீர்த்தேக்க ஏரிக்கரைகளில்
குடிசைகளின் குடியேற்றம்
அடுக்குமாடி உயர்ந்திட
அடிமண்ணில் குறைபாடு
தான்பாய வழியில்லா
தண்ணீர் வெள்ளம்
நகரப்பாதையில் நடமாடிட
கண்ணீர் வெள்ளம்
கேட்பார் பலருண்டு
கேள்விகளை மட்டுமிங்கே
விடையுரைக்க ஞானமின்றி
விதியென்று நழுவிடுவார்
புதுப்பிக்கப் படவேண்டும்
புது நகரக் கட்டமைப்பு
வெள்ளம் ஓடத் தனிப்பாதை
அமைத்திட அவலங்கள் அகலும்
,------
முகில் தினகரன், கோவை