tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-13.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-13.05.25


பல லட்சம் வாசகர்களை கொண்ட 


தமிழ்நாடு இ பேப்பருக்கு 


 வாழ்த்துக்கள் இத்தகைய 


சூழ்நிலையில் வாரம் ஒரு சிறப்பு 


இதழ் லாபம் பன்முகம் தெய்வம் 


சினி துளி வெளியிடுவது 


ஆச்சரியமாக உள்ளது. 


உங்கள் டீமின் கடுமையான 


உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றி 


என்று கூறலாம். 


பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல் 


மூலம் இந்தியாவை பணியவைக்க 


முடியாது என மோடி கூறி உள்ளார் 



இந்தியா பாகிஸ்தான் போரை 


நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் 


தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்


பொள்ளாச்சி வழக்கில் 


 அனைவருக்கும் ஆயுள் தண்டனை 


போதாது ஒன்று தூக்கில் போட 


 வேண்டும் அல்லது அவர்களை 


என்கவுண்டர் போட வேண்டும். 


அனைவரும் அரசியல் பின்புலம் 


உள்ளவர்கள். பாஜக பாமக உடன் 


ஒருபோதும் கூட்டணி கிடையாது 


என திருமாவளவன் கூறி 


இருக்கிறார். உழவாரப்பணி 


கட்டுரை மூலம் எவ்வளவு 


நன்மைகள் உள்ளது என்பதை 


காண முடிகிறது. சமயபுரம் 


மாரியம்மன் கட்டுரை மூலம் 


பல அரிய தகவல்களை பார்க்க 


முடிந்தது. வேலூர் முத்து ஆனந்த் 


சார் அவர்களின் இயக்குனர் 


சுந்தர்ராஜன் பற்றிய கட்டுரை 


அரிய பொக்கிஷம் நன்றாக உள்ளது 


பழைய படங்களை அலசி ஆராய்ந்து 


கட்டுரை எழுதி இருப்பது சிறப்பு 


ஹைதராபாத்தில் போதைப்பொருள் 


 வாங்க ஒரு கோடி மதிப்புள்ள 


சொத்துக்களை விற்ற பெண் 


ஆச்சரியமாக உள்ளது. 


நூறு கோடி நிலத்தை அபகரித்த 


வழக்கில் விஜயபாஸ்கர் தொடர்பு 


இருப்பது நிரூபணம் ஆகி உள்ளது 


ஹைதராபாத்தில் 70 லட்சம் 


லஞ்சம் வாங்கிய வருமான


 வரித்துறை துணை ஆணையர் 


கைது செய்யப்பட்டுள்ளார். 


ஆப்கானிஸ்தானில் சதுரங்க 


விளையாட்டுக்கு தடை வதிக்க

 

பட்டுள்ளது. உக்ரைன் அதிபரும் 


ரஷ்ய அதிபரும் பேச்சுவார்த்தைக்கு 


வந்திருப்பது நல்ல ஒற்றுமை 


இந்தியா பாகிஸ்தான் போர் 


நிறுத்தத்தை புதிய போப் 


வரவேற்றுள்ளார். சமையலறை 


டிப்ஸ் பயனுள்ள வகையில் 


அமைந்துள்ளது அமராவதி 


நகரில் புதிய தலைமைச் செயலகம் 


புதிய தலைநகர் 67,000 கோடியில் 


நாயுடு அமைக்க இருப்பது 


வியக்க வைக்கிறது. 


இ பேப்பருடன் மாதத்திற்கு 


நான்கு வார இதழ்களும் 


திறம்பட நடத்துவது என்பது 


எளிதான காரியம் அல்ல 


அதனை சிறப்பாக நடத்தும் 


இ பேப்பர் குடும்பத்துக்கு 


வாழ்த்துக்கள்



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி