உறவையும்,
நட்பையும் மறந்து
உணவையும்
உடலையும் துறந்து
உயிராக
தாய்நாட்டை
யெண்ணி
உன்னையே
விழுதாக்கி வாழ்
கின்றாய்!
விடியும்
பொழுதும்
தெரியாது!
விழிகளும்
உறங்க
நினைக்காது!
பசியும், பட்டினியும்
தெரியாது!
பகலும் இரவும்
புரியாது!
கண்ணாக மக்களை
எண்ணிடுவாய்!
கண்ணியமாய்
நாட்டைக்
காத்திடுவாய்!
கலங்காத நெஞ்சமே
கொண்டிடுவாய்!
கோபுர கலசமாய்
திகழ்ந்திடுவாய்!
காவல் தெய்வமே
நீ வாழ்க! வாழ்க!
கலங்கரை விளக்கே
நீ வாழ்க! வாழ்க!
காந்தியின் தேசத்தை
காத்து நிற்கும்
கடமை வீரனே
நீ வாழ்க! வாழ்க!
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.