குடும்பத்தோடு கீழே விழ இருந்தவனை காப்பாற்றி சொன்னவன் அந்த குடும்பத்திற்கே" />
கடவுள் மனித ரூபத்தில் ஆங்காங்கே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறான்... "சார் பைக்ல சைடு ஸ்டாண்ட் எடுக்கல !' குடும்பத்தோடு கீழே விழ இருந்தவனை காப்பாற்றி சொன்னவன் அந்த குடும்பத்திற்கே ஒரு கடவுள் ! ரயில்வே ட்ராக்கில் பாறாங்கல்லை வைத்ததை கண்டுபிடித்து சிவப்பு உடைகாட்டி அந்த இரயிலை நிறுத்தியவன், அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுக்கு அவன் ஒரு கடவுள் ! ஆட்டோ பயணத்தின் போது நகைப்பையை தவறவிட ....அதை திருப்பி காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் , நகையை தவறவிட்டவருக்கு ஒரு கடவுள் ! இறுதியாக.... "சார் அந்த வழியா போகாதீங்க போலீஸ் வாயை ஊதி காண்பிக்க சொல்லி டிரங்கன் டிரைவ் பிடிக்கிறாங்க... !" எனக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி செல்பவனை எச்சரிக்கை செய்பவனும்,குடிமகன்களுக்கு ஒரு கடவுளே ! -எம்.பி.தினேஷ் கோவை - 25 Breaking News:
கடவுள் !