tamilnadu epaper

காதலுக்காக சொன்ன பொய்கள் ஆயிரம்

காதலுக்காக சொன்ன பொய்கள் ஆயிரம்


நம் காதல் 

காலங்களில் 

நான் கட்டியனுப்பிய 

சிறு சிறு 

பொய்களால் 

நிரம்பிய 



உன் கைபேசியின்

குறுந்தகவல் பெட்டி 

இயங்க இயலாமல்

உறைந்திருக்கிறது!


அத்தனை 

பொய்களின் பின்னே உறைந்திருப்பது


ஒரே ஒரு மெய் தான்!

அது 

என் காதலின் மெய்தான்;


செல்வந்தன் என்றொருப்

பொய்யுரைத்தேன் மெய்தான்!


ஈடில்லா நீ என் சொந்தமானதனால்

செல்வந்தன் ஆகிவிட்டேன்!


என் பொய்யே மெய்யானது!


மதுப்பழக்கம் இல்லையெனப்

பொய்யுரைத்தேன்!


மெய்தான்!


உன் கண்கள் வடிக்கும் காதல் மதுவை

வடித்து குடிப்பதனால்

என் பொய்யே மெய்யாயிற்று!


பெண்ணழகை கண்டதில்லை என்றதும் 

பொய்தான்!


உன்னழகை கண்டதனால் 

அதுவும் மெய்யாயிற்று!


இப்படி நான் கட்டிவைத்த ஆயிரம் பொய்களை 

அரை நொடியில் கடந்து வா!


என் இதயவாசலில் நான் 

காத்திருக்கிறேன் உனக்காக!


என் ஆயுள் 

உள்ளவரை உனைகாக்க!


-ரேணுகாசுந்தரம்