tamilnadu epaper

கல்லுமலை கந்தன், இராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா

கல்லுமலை கந்தன், இராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வைகாசிபட்டி கிராமம் சாத்தியார் அணை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கல்லுமலை கந்தன், இராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா இரண்டு நாட்கள் நடந்தது.இதில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்களது நிலங்களில் விளைந்த பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.