tamilnadu epaper

கவலைக்கு மருந்து

கவலைக்கு மருந்து

காலையில் கண்விழித்ததும்
பூமியைப் புதுப்பிக்கும் எண்ணம் உதயம் !

மேலே மரங்களை நகர்த்தினேன்
கீழே விண்மீன்களைக் கிடத்தினேன்
வடக்கே சூரியனையும்
தெற்கே நிலவையும் வைத்தேன்
பூமிக்கு புதிய கோலமிட்டேன்…

கற்பனைகள் தீர்வின் திசைகள்
ஆமாம்- 
சற்றே இட வலம் மாற்றிப்பாருங்கள்
வெறும்…
பெயர்ப்பலகை மாற்றங்கள் கூட
சூழலைப் புதுப்பிக்கும் !

அப்படித்தானே….
சிறகடித்த பறவைகளைச் சிறைப்பிடித்து வந்தவன்…
உலோகப் பறவைகளை வானில் உலவ விட்டான் 
குண்டூசியைக்கூட மூழ்கடிக்கும் கடலின் மீது
கப்பலை மிதக்க விட்டான்..

கற்பனைகள் காட்சிக்கு விருந்து மட்டுமா ?
கவலைக்கு மருந்துமல்லவா 
~~~~~~~~
கவிஞர் ம.திருவள்ளுவர் 
திருச்சி