காந்தி நகர்,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர். இவர் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. ஆவார். இதனிடையே, கவுதம் கம்பீருக்கு கடந்த 22ம் தேதி இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர் என்ற பெயரில் கவுதம் கம்பீருக்கு இ மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டெல்லி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவன் ஜிக்னேஷ்சிங் பர்மர் (வயது 21) இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.