tamilnadu epaper

பூந்தமல்லி– போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி– போரூர் சந்திப்பு  மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்


சென்னை, ஏப். 29–

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லிடம் வழித்தடத்தில் நேற்று ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டம் துவங்கியது. 


 இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், திட்ட இயக்குநர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

 மெட்ரோ மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறுகையில், "இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வழித்தட சோதனை மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம்” என்று கூறினார்.


 இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர்சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது.