விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அமைந்துள்ள அங்காளம்மன் திருக்கோயில் பிரதி மாதம் அமாவாசை நாள் அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்
வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் மாசி மாதம் நடைபெறும் மாசி பெருவிழா மற்றும் சித்திரை மாதம் நடைபெறும் விழா அன்று மட்டும் சக்தி கரகம் புறப்பாடு இருக்கும் ஊஞ்சல் உற்சவம் இன்றி விழா நடைபெறுகிறது
ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவம் இன்றி சித்திரை மாத அமாவாசை நாளை முன்னிட்டு அக்னி குளத்தில் இருந்து நள்ளிருவு சுமார் 2 மணி அளவில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம் முக்கியமாடவீதி வழியாக வந்தன லட்சகணக்கான பக்தர்கள் பொதுமக்கள் வணங்கி விட்டு அம்மன் அருளை பெற்று சென்றனர்