பொழுது புலர்ந்தது
பூத்தன மலர்கள்
மணமும் நாசியில்
ஈர்த்தது மனதை
பரவசப் படுத்தி
காற்றும் இதமாய்
வருடும் மேனியை
தாங்குவ தெவரோ...?
இரவி சோர்வடைய
மாலையும் சாய்ந்தது
இரவு தொடங்கவும்
வான்நிலாக் காட்டியது
மல்லிகை மணந்தது
மேவியது வெளிச்சம்
தழுவியது மேனியை
தாங்குவ தெவரோ..?
இரவின் பிடியில் மனமும்
மேனியும் வாடி வதங்க
தனிமை எனும் கொடுமை
தாக்கி விழும் மயிலை
மயக்கி மயக்கி என்றும்
பார்த்து உளம் திருடிய
கள்வன் கணமே வந்து
காரிகையை தேற்றுவானோ...?
- துரை சேகர்
கோவை.