tamilnadu epaper

குலதெய்வமும் அதன் சிறப்புகளும்

குலதெய்வமும் அதன் சிறப்புகளும்

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவில்

 

பொதுவாக மாசாணியம்மன் பலருடைய குலதெய்வமாக வணங்கப்படுகிறது அவள் மகாதேவியின் அம்சமாக எல்லோராலும் பூஜிக்கப்படுகிறாள்.

 

இப்படி பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சி அருகே ஆனைமலை என்ற இடத்தில் உள்ளது

 

இந்த கோவில் பொள்ளாச்சிக்கு தென்மேற்கு சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை என்ற இடத்தில் அமைந்துள்ளது.

 

இந்தக் கோவில் ஆழி ஆறு மற்றும் உப்பர் ஓடை இரண்டும் சங்கமிக்கும் இடத்தில் ஆனைமலை அருகே புல்வெளியில் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கோவில்

 

இங்கு இருக்கும் மாசாணி அம்மன் மூலவராக போற்றப்படுகிறார் அந்த அம்மன் தலை முதல் கால் வரை 15 அடி உயரமும் ஒரு தனித்துவமான படுத்திருக்கும் தோரணையில் காணப்படும் அற்புதமான கடவுள்

 

அம்மன் பார்ப்பதற்கு மிகவும் அம்சமாக இருக்கும் இந்த அம்மனின் நான்கு கைகளிலும் மேளம் மண்டை ஓடு பாம்பு திரிசூலம் ஆகியவற்றை தாங்கி இருப்பாள் 

 

இந்த மாசாணி அம்மன் கோவில் வளாகத்தில் வழிபடப்படும் மற்ற தெய்வங்களில் நீதி கல் மற்றும் மகா முனியப்பன் ஆகியோர் அடங்குவர்.

 

மாசாணி அம்மன் கையில் இருக்கும் திருசூலம் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த மாசாணி அம்மன் கையில் இருக்கும் திருசூலத்தைச் சுற்றி வந்தால் உடலில் எப்படிப்பட்ட நோயும் குணமாகிவிடும் என்பது மக்களுடைய நம்பிக்கை.

 

இந்த திரிசூலத்தை சுற்றி வரும் பெண்களுக்கு மாதவிடாய் பற்றி எந்த பிரச்சினை இருந்தாலும் தீர்த்துவிடும் வல்லமை படைத்தவர் மாசாணி அம்மன்

 

இந்த மாசாணி அம்மன் கோவில் வந்ததற்கு ஒரு புராணக்கதை உண்டு பழங்காலத்தில் ஆனைமலையை நன்னூர் என்றும் அழைப்பார்கள். அதனால் இந்த பகுதியை ஆட்சி செய்தவர்களை நன்னூரார் என்று அழைப்பர்.

 

அப்படி ஒரு நன்னூரரால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர் தனது மாந்தோப்பில் உள்ள பழங்களை அவருக்கு தெரியாமல் திருடி சொல்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதித்தார். 

 

நன்னூரன் படை தளபதியின் பெயர் கோசர் கோசருக்கு சயணி என்ற ஒரு பெண் இருந்தாள் சயனி மிகவும் அழகானவள் எனவே அவர் தன் மகளுக்கு நல்ல வீரமான ஒருவனையே திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். மகிழன் என்பவனே மிக வீரமானவன் என்று உணர்ந்து தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 

 

சயணி மகிழன் இருவரின் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக சென்று கொண்டிருந்தது. திருமணம் முடிந்த சில மாதத்திலேயே சயணி கர்ப்பம் அடைந்தாள். அதனால் கோசர் தன் மகளுக்கு வளைகாப்பு போன்ற நல்ல வைபவத்தை எல்லாம் விமர்சையாக செய்தார். பின் எட்டாவது மாதத்தில் தனது மகளை பிரசவத்திற்காக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் மருமகன் தன் மனைவியை பிரிய மனம் இல்லை என்று சொல்லவே தன் அன்பு மகள் சயணியை அங்கே விட்டு வந்தார்  

 

சயணிக்கு மாம்பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவளுடைய அப்பா கோசர் பலவிதமான மாம்பழங்களை வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்தார். ஒரு நாள் சயணியின் தோழிகள் சயனியை பார்க்க வந்தபோது அவளைப் பார்த்து நாம் ஏரியில் குளிக்க சொல்லலாம் என்று சொல்லவே தன் தோழிகளுடன் ஏரியில் குளிக்கச் சென்றார்.

 

அப்போது அந்த ஏரியில் ஒரு மாம்பழம் தண்ணீரில் மிதந்து வந்தது அதை எடுத்து சயணி அப்படியே சாப்பிட ஆரம்பித்தாள். அது அந்த நன்னூரான் தோட்டத்து மாம்பழம் என்பதை அறிந்த காவலாளி மன்னனிடம் போய் இதை சொல்ல மன்னன் சயணிக்கு மரண தண்டனை கொடுத்து விட்டான்..

 

இது தெரிந்து கொண்ட மகிழன் தன் மனைவிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் என்று மன்னரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டான். தன் மனைவியின் மரண தண்டனையை ரத்து செய்தால் தான் தங்கமும் பல யானைகளும் பரிசாக தருவதாக சொல்லியும் மன்னன் அதைக் கேட்காமல் சயணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றி விட்டான் இதை பார்த்த மகிழன் கோபத்துடன் மன்னன் கொன்று அவனும் உயிர் துறந்தான்.

.

இந்த செய்திகளைக் கேட்ட சயணியின் தந்தையும் தன்னை மாய்த்துக் கொண்டார்.

 

இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பிறகு பல காலம் அந்த ஊரில் மழை இல்லாமல் மக்கள் அவதியுற்றனர் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை தந்ததால் தான் ஊரில் மழை இல்லாததை உணர்ந்து மக்கள் அந்த பெண்ணிற்கு மண்ணில் சிலை எடுத்து பெண் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர் வழிபட ஆரம்பித்தவுடன் மழை பெய்து ஊர் செழுமை அடைந்தது.

 

மக்கள் அந்த அம்மனையே மாசாணி அம்மனாக வழிபட்டனர் பிள்ளை பேர் இல்லாதவர்கள் மாசாணி அம்மன் வேண்டினால் பிள்ளை பேறு சீக்கிரம் கிடைக்கும் அதே போல் மிளகாய் அரைத்து அம்மன் மீது பூசி வேண்டினால் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பிக்கை உடையவர்கள் 

 

மிகப் பழைய தமிழில் மாம்பழத்திற்கு மாசாணி என்ற ஒரு பெயர் உண்டு அந்தப் பெண்ணின் ஞாபகமாக. மாசாணி அம்மன் கோவில் என்று வைத்தார்கள் இது சமஸ்கிருதத்தில் ஷமசானி என்று அழைக்கப்படும் அதாவது ஷமாசானி என்றால் தமிழில் கல்லறை என்றும் பெயர் பெறும். அந்தக் கல்லறையில் அந்த பெண்ணினுடைய அகால முடிவையும் குறிப்பிட்டு இருந்தனர்.

 

இவ்வாறு அந்தப் பெண் மாம்பழத்தை சாப்பிட்டு அதற்காக தூக்கிலிட பட்டார் மாம்பழத்தின் தூய தமிழ் பெயரான மாசாணியையே அந்த பெண்ணிற்கு சூட்டி இந்த கோவிலை மாசாணி அம்மன் கோவில் என்று அழைக்கிறார்கள்.

 

இந்தக் கோவிலில் மிகச் சிறப்பு வாய்ந்தது பூக்குண்டம் இறக்கும் விழா எனப்படும் தீமிதி திருவிழா நடைபெறுகிறது அதிகமான பக்தர்கள் வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெறுவார்கள் .

 

புராணங்களில் இதை வேறு விதமாகவும் கூறுகிறார்கள் அதாவது கடவுள் ராமர் தாடகை என்ற அழகியை கொள்வதற்கு முன்பு மாசாணி தேவியிடம் பிரார்த்தனை செய்ய ஆனைமலைக்கு வந்ததாகவும் சொல்வார்கள்.

 

தாங்கள் நினைத்து காரியத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் மாசாணி அம்மனை குலதெய்வமாக கொண்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.

 

நமக்கும் வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சிக்கு அருகே ஆனைமலை அருகே இருக்கும் மாசாணி அம்மனை சென்று தரிசித்து அந்த அம்மனின் அருளை பெறுவோம்

 

செல் எண்: 8903282116      

ராதிகா வைத்யநாதன்                                   

கிரான்பெர்ரி நியூ ஜெர்சி அமெரிக்கா