tamilnadu epaper

கூட்டணி பற்றி 15 நாளில் அறிவிப்பேன்: ஓ.பி.எஸ்.

கூட்டணி பற்றி 15 நாளில்  அறிவிப்பேன்: ஓ.பி.எஸ்.


சென்னை, மே 16–

தே.ஜ.கூட்டணியில் தான் நீடிக்கிறோம். இனியும் தொடரவேண்டுமா என்பது பற்றி மாட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15 நாளில் அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா இல்லையா என்பது குறித்து 15ம் தேதி அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை பன்னீர் செல்வம் கூறியதாவது:

  தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். விரைவில் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி, தொண்டர்களிடமும் கருத்து கேட்ட பின்னர், 15 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்போம். 

இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரை, அது தற்காலிகமாகத்தான் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு வழங்கப்பட்டது.அந்த தற்காலிக நிலைப்பாடே இன்றுவரை தொடர்கிறது. 

  சென்னை வந்த அமித் ஷா தங்களை அழைக்காதது வருத்தமளித்தது. கூட்டணி குறித்து பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதுவரை தேசிய ஜனநாயக கூட்டயில்தான் தொடர்கிறோம். யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

 என்டிஏ கூட்டணிக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான தலைவராக இருப்பார் என பாஜ அறிவித்துள்ளது. அந்த நிலைப்பாட்டை ஏற்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் மழுப்பலாக பதிலளித்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் பன்னீர்செல்வம்.