திருவனந்தபுரம்,
கேரளாவில் லாட்டரி விற்பனை மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. கேரள அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரிகளையும் வெளியிடுகிறது.
இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கேரளாவில் 41 ஆயிரத்து 138 கோடி ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வரி வருவாயாக 11 ஆயிரத்து 518 கோடி ரூபாயும், அரசுக்கு லாபமாக 2 ஆயிரத்து 781 கோடி ரூபாயும் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.