_சிக்கல் சிங்காரவேலர் கோவிலில்_ _சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்_
_வேல்_ _வாங்கும்போது முருகனின் திருமேனி_ _முழுவதும் வியர்வை பெருகுகிறது._
_திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் _ராகு காலத்தில் மட்டும்_ _சிவபெருமானுக்கு_
_செய்யப்படும்_ _அபிஷேக பால நீலநிறமாகிறது._
_நாகர்கோவில் _கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர்_ _ஆறுமாத காலம்_
_கருப்பாகவும்,_ _ஆறுமாதம்_ _வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்._
_வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை_ _கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை._
_திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு _அபிஷேகம் செய்யப்படும்_ _தேன் முழுவதும்_
_உறிஞ்சப்படுகிறது._
_ஆந்திராவில் மங்களகிரியில்_ _பானகரம் தயாரித்து பானகநரசிம்மர்_ _கோவிலில்_
_நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு_ _தம்ளர்_ _ஊற்றினால் பாதியை_
_உள்வாங்கிக்கொள்கிறார்._ மீதி _பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்._
_கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின்_ _திருவாபரண பெட்டியை_ _எடுத்துச் செல்லும்_
_போது கருடன் தரிசனம் தருகிறது._
_கும்பகோணம் அருகே திருநறையூர்_ _நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்_
_கருடன் முதலில் 4 பேர் தூக்க_ _ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து_
_வீதிக்கு_ _வருவதற்குள் 8, 16,_32, 64 பேர்_ _சேர்ந்து தூக்கும்_ _அதிசயம்_
_இன்றும்_ _நடைபெறுகிறது._
_முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி_ _எடுப்பவர்களின் பானைக்குள்_
_பாம்பும்,_ _மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்_ _மீனும் தானாக_
_வருகின்றன._
_திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் _12 ஆண்டுகளுக்கு_ _ஒரு முறை சங்கு_
_தோன்றுகிறது._ _சிவனுக்கு படைக்கப்பட்ட_ _பிரசாதத்தை கழுகு உண்ணும்_ _அதிசயம்_
_நடைபெற்றது._
_திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில்_ _அருகருகே உள்ள_
_தெய்வானை_ _சுனையின் நீர் எப்போதும்_ _குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின்_
_நீர் இரவுபகல் எந்நேரமும்_ _வெந்நீராகவும் இருக்கிறது._
_தூத்துக்குடி முத்தையாபுரம் _*மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
_கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக_ _மதுவை அருந்தும்_
_அற்புதம் நடக்கிறது._
_காசியில் கருடன் பறப்பதில்லை._ _மாடு முட்டுவதில்லை._ _பிணம் எரிந்தால்_
_நாற்றம்_ _எடுப்பதில்லை._ _பூக்கள் மணம் வீசுவதில்லை._
_சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்_ _அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்_
_கோவிலில்_ _மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது._
_திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
_சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு_ _மாறுகஇருக்கும்_ _குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள்*_ _இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை_
_கடல்நீர்_ _உள்வாங்கி பக்தர்கள்_ _வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது._
_ஸ்ரீவில்லிபுத்தூரில்_ _சிவராத்திரியன்று கொதிக்கும்_ _எண்ணெயில் கையைவிட்டு_
_வடை சுடுகிறார் ஒரு பாட்டி._
_திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில்*_ _நான்குவழி சாலையை_ _அகலப்படுத்த_
_நாகாத்தம்மன்_ _குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப்_ _புற்றை அகற்ற_ _முயன்றபோது 7_
_புல்டோசர்கள்_ _பழுதாகி விட்டன._ _இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்_
_விட்டு விட்டு சாலை அமைத்தனர்._
_வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில்_ _ஆண்டுக்கு ஒருமுறை_
_பங்குனியில்_ _சூரிய_ _ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது_ _பட்டு தங்கநிறமாக_
_ஜொலிக்கும் அதிசயம்_ _நடைபெறுகிறது._
_திருநெல்வேலி கடையநல்லூர் அருகில்*_ _சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்_
_கோவிலில் சூரியன்_ _மறைந்துவிட்டபோதும்_ _பிரகாரத்தில்_ _உள்ள_ _விளக்குகளை_
_அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்._
_சோமநாதபுரம் சிவன்கோவிலில்_ _சிவலிங்கம் அந்தரத்தில்_ _இருந்தது. கஜினி_
_முகமது உடைத்து அழித்தான்._
_அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், _தீமிதித்தல்_ _போன்ற நோ்த்திக்_
_கடன்கள்_ _செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை._
_இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம்.இதுபோன்ற அற்புதமான கோவில்களை,_
_மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும்_ _பாக்கியத்தை புண்ணியம்_ _செய்தவர்கள்_
_பெறுகிறார்கள்._
-முத்து ஆனந்த்
வேலூர் - 632002