கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. சில இடங்களில் பல்வேறு காரண காரியங்களுக்காக அவை தள்ளியும் போகலாம். .அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.
நான்கு வகை கும்பாபிஷேகம் :
1. ஆவர்த்தம் :
ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து, பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வது.
2. அனாவர்த்தம் :
வழிபாடு இன்றியும், இயற்கை சீற்றங்களாலும் சிதைந்து போன ஆலயங்களை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3. புனராவர்த்தம் :
கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியவற்றில் ஏதாவது சிதைந்து போயிருந்தால், அதற்கு பாலாலயம் செய்து புதுப்பித்து, அஷ்ட பந் தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவது.
4. அந்தரிதம் :
கோவிலுக்குள், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதன் பொருட்டு செய்யப்படும் வழிபாடு.
கும்பாபிஷேகத்தில் நடைபெறும் பூஜைகள்:
அனுஞை :
காரியங்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து, இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
சங்கல்பம் :
இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
பாத்திர பூஜை :
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கான பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு, அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜித்தல்.
கணபதி பூஜை :
காரியம் வெற்றியாக நிறைவேற கணபதியை வழிபடுதல்.
வருண பூஜை :
கோவிலை சுத்தம் செய்வதற்காக, வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வணங்குதல்.
பஞ்ச கவ்யம் :
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும்..