வாழும் காலம்
வளமாய் நலமாய்
பகுத்தறிவும் பண்பும்
பெற்று வாழ்ந்து
சிந்தனையை சீராக்கி
செயலில் இறங்கி
சாதிமத பேதமின்றி
நட்புடன் உறவாடி
பெரியோர்கள் வழியில்
போற்றும்படி நடந்து
ஏற்றமுடன் முன்னேற
முயற்சி செய்து
அனைத்துத் துறைகளிலும்
கால் பதித்து
நல்வழிப் பாதையில்
வீறுநடைப் போட்டு
அஞ்சாத நெஞ்சம்
கொண்டு சிங்கமாய்
நாடென்ன செய்தது
நமக்கென நினையாமல்
நாமென்ன செய்தோமென
நினைத்து உதவினால்
நாடும் வீடும் நமக்கென வசமாகும்
நம்பிக்கைத் துணையுடன் கால்
பதித்தால்
வானமும் பூமியும்
செழித்து சிறக்கும்
பாரத பூமியைக்
காக்கும் அரணாய்
சத்தியமே லட்சியமாய்க்
கொள்ளடா மகிழ்வுடன்
தலை நிமிர்ந்து
நில்லடா பெருமையுடன்.
-தாராமதன்