tamilnadu epaper

சர்க்கரை நோய் ஒழிக்கும் ஶ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில்.

சர்க்கரை நோய் ஒழிக்கும் ஶ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில்.

சங்க காலத்திலேயே பிரசித்தி பெற்ற இத்தலம் ஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் போற்றி பாட பட்ட தலமாகும்.  

இங்குள்ள கடவுளை சுந்தரர் 



“மருகல் உறைவாய் மாகாளத்தாய்! – மதியம் சடையானே!

ஆருகர் பிணி நின் அடியார் மேல் அகல அருளாயே

கருகாற் குரலாய் வெண்ணிக் கரும்பே!”



என்று பிணி தீர்க்கும் பெருமானாக பாடியுள்ளார்.


இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வர பெருமாள் பக்தர்களின் அனைத்து பிணிகளையும் குறிப்பாக சர்க்கரை நோயைப் போக்குபவராக இருக்கின்றார். 


இக்கோயிலில் அளிக்கப் படும் விபூதியின் மகிமையை பாருங்கள். விபூதியை ஒரு சிட்டிக்கை குடிநீரில் கலந்து தினம் சூரிய உதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் அருந்த வேண்டும். தொடர்ந்து 24 நாட்கள் 108 முறைகள் “ஸ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வராய நமஹ” என்று ஜெபித்த பின்னர் அந்நீரை அருந்த வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து முடிவில் காணாமல் போய் விடுகிறது என்று பக்தர்கள் கூற கேட்டேன்.  


எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இத்திருத்தலம் சென்று விபூதி பெற்று நோயை வெல்லலாம் என்பதால் பக்தர்களை சென்று தரிசித்து பயன் பெற வேண்டுகிறேன்.


இத்திருத்தலம் சதுர்யுகம் கண்ட ஸ்தலமாகும். 


இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெண்ணிக்கரும்பேஸ்வரர் ஒரு கரும்பு வடிவில் சுயம்பு மூர்த்தி என்றும் அறியப் படுகிறது.


தேவசேனா சுப்ரமணியர் திருக்கல்யாண வைபவ பத்திரிக்கை இத்தலத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கந்தபுராணக் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.


அம்பாள் ஸ்ரீ சௌந்தரநாயகி என்றும் அழகியநாயகி என்றும் அழைக்கப் படுகிறார். பெயருக்கேற்றார் போல் அழகிய முகமண்டலத்துடன் யாவருக்கும் காட்சியளிக்கிறார்.  


இங்கு அட்சராப்யாஸ தேவி என்ற அம்பாளுக்கும் சன்னதி உள்ளது. இவர் ஒரு கரத்தில் புத்தகமும் மற்றொரு கரத்தில் குழந்தை கண்ணனையும் வைத்து காட்சி தருகிறார். இவர்தான் கண்ணனுக்கு அட்சராப்யாஸம் செய்ததாக நம்ப படுகிறது.


இக்கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி மற்றும் சந்திர புஷ்கரணி தீர்த்தங்கள் எல்லா விதமான நோய்களையும் ரோகங்களையும் ஒழிக்க வல்லனவாகும்.


இத்தனை சிறப்பு மிக்க சுயம்பு மூர்த்தியான ஸ்ரீ இஷுபுரீஸ்வரர் (இஷூ என்றால் கரும்பு என்று அர்த்தம்) இங்கு ஸ்ரீ வெண்ணிகரும்பேஸ்வரர் என்றும் போற்ற படுபவர்.


இக்கோயில் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் கோயில்வெண்ணியில் அமைந்துள்ள ஒரு சக்தி வாய்ந்த சிவஸ்தலமாகும்.



-ரமா ஶ்ரீனிவாசன்