tamilnadu epaper

சிறப்பு மகாயாகம்

சிறப்பு மகாயாகம்

வருடத்திற்கு ஒருமுறை சேர்ந்து வரும் ஸ்ரீநாகபஞ்சமி, ஸ்ரீகருடபஞ்சமி மகாயாகம் சிறப்பாக நடைபெற்றது*

 

*திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்*

 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தை அடுத்த குலால்பாடி கிராமத்தில் உள்ள பல நூற்றாண்டு பழமை வாய்ந்த நாகக் குட்டையில் வருடத்திற்கு ஒருமுறை வரும் ஸ்ரீநாக பஞ்சமி மற்றும் ஸ்ரீ கருடபஞ்சமியையொட்டி சிறப்பு மகா யாகம் நடைபெற்றது 

 

முன்னதாக கோ பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீநாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  

நாகராஜருக்கும், கருடபகவானுக்கும் மகாயாகம் நடைபெற்றது 

 

சிறப்பு மகாயாகத்தை A.P. இரமேஷ் அவர்கள் தலைமையில், வள்ளிமலை அருணகிரி குருக்கள் யாகம் வளர்த்தார்

 

ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் மகாயாகத்தில் கலந்து கண்டு அர்ச்சனை செய்து நாக வழிபாடு மற்றும் கருட வழிபாடு செய்தனர்

 

யாகத்தின் முடிவில் அனைவருக்கும் வஸ்திரதானமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது