கடந்த மே பத்தொன்பதாம் தேதி புஸ்தகாவில் வெளிவந்து முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் தொகுத்த ( பதின்மூன்று பெண் கவிஞர்கள் படைப்புகளைத் தாங்கிய ) சிறு தூறலை முந்தும் பெரு வானவில்கள் என்ற புதுக்கவிதை நூலின் அறிமுக விழா கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் ஐயா தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது.
திருமதி பார்கவி சதீஷ் இனிய குரலில் இறை வணக்கம் பாடி ஆரம்பித்த ,விழா நிகழ்வினை செல்வி.ஸ்ரீ சாய் கல்யாணி, அழகு தமிழில் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.கவிஞர் புதுகை ஆதீரா, சிறப்பான முறையில் வரவேற்புரை வழங்கினார். கவிச்சுடர் ஐயா தமது தலைமை உரையில் நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டியது சிறப்பு. அடுத்ததாக வாழ்த்துரை வழங்க வந்த சிறார் இலக்கிய வல்லுநர், நூலேணி பதிப்பக நிறுவனர் கன்னிக்கோவில் இராஜா தமக்கேயுரிய நகைச்சுவை பாணியில் வழங்கிய வாழ்த்துரை, இலக்கியத் துறையின் பல தகவல்களைக் கொண்டதாக இருந்தது.நூலில் தம் கவிதைகளை இடம் பெறச் செய்த கவிஞர்கள்
திருமதி. அன்புச்செல்வி சுப்புராஜு மற்றும் முனைவர் ஞானி அஜயன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி தமது ஏற்புரையை வழங்க, நூலில் தம் கவிதைகளை இடம் பெறச் செய்த தமிழாசிரியர் திருமதி.கௌரி ராமன் நன்றியுரை வழங்கினார்.