tamilnadu epaper

சிலம்பின் நாயகி

சிலம்பின் நாயகி


வறுமையின் துயர் நீங்க 

கால்சிலம்பினை கையளிதாய் 


பொறுளீட்ட சென்ற 

கள்ளமில்லா கோவலனும் 


வீண்பழி சுமந்திட்டே 

வீனில் உயிர் நீத்தான் 


மாண்டவனின் பழி போக்க 

புயலென புறப்பட்டாய் 


கொற்றவனின் தவறுரைத்தாய்,

கொண்டவனின் நிலையுரைத்தாய் 


மன்னவனும் தலைகுனிந்தான்,

தவறான தீர்ப்பளித்த 

தன்னையே 

மாய்த்துக்கொண்டான் 


பத்தினி தெய்வமாய்,

கற்பின் அரசியாய் 


சிலம்பின் நாயகியாய்,

பைந்தமிழ் காவியமானாய்.



-கோபாலன் நாகநாதன்,

சென்னை 33.