tamilnadu epaper

ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை

ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை

ஞானிகளும் சித்தர்களும் நிறைந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை.. இந்தத் திருவண்ணாமலையில் ஏராளமான மகான்கள் இன்னும் வாழ்ந்து மலையை சுற்றி வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம். 

   திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எமலிங்கம் அருகில் அமைந்துள்ள சி ல ஸ்ரீ சாது சுவாமிகள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை தொழிலதிபர் டி டி கே முருகன். . ஸ்ரீ அருணகிரிநாதர் மணிமண்டபத் தலைவர் சடையப்ப வள்ளல் விருதாளர் மாதவ சின்ராசு. . தொழிலதிபர் அமரேசன் பட்டு சாமி. . உள்ளிட்ட குழுவினர் மேற்பார்வையில் பக்தர்களின் சார்பில் மகா ஹோமம் 108 சங்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை அன்னதானம் இவைகள் ஐந்தாம் தேதி நடக்கிறது. ஸ்ரீ ல ஸ்ரீ சாது சுவாமிகள் வாழ்க்கையில் சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு. .. 

   சுவாமிகள் திருவனந்தபுரத்தில் ஆர் கிருஷ்ணமூர்த்தி இணையர் மீனாட்சிக்கும் மகனாக26. 3.1937 பிறந்தார். தந்தை கிருஷ்ணமூர்த்தி ரயில்வேயில் பணிபுரிந்ததால் சுவாமி ஏழாவது வயதில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் குடியேறினார். கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மைக்கேல் ஸ்கூல் பள்ளியில் படித்தார். . படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். . பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தின் போது முதல்வரிடம் துணிவாக பேசி அவரின் பாராட்டுதலை பெற்றார் இவர். 

   பள்ளிப்படிப்பை முடித்த பின் குடும்ப சூழல் காரணமாக துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு வேதாந்த நூல்கள் மிகவும் பிடிக்கும் எப்போது படித்துக் கொண்டிருப்பார். அவருடைய 16 வது வயதில் தந்தைக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தந்தையைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். . அன்றிலிருந்து தனிமை வாழ்வை தொடங்கினார். . அவர் எப்போதும் ஓம் சக்தி ஓம் சக்தி என்று சொல்லிக் கொண்டே இருப்பார். . இவரின் சந்நியாசிய வாழ்க்கை பொள்ளாச்சி உடுமலை பழனி ராமேஸ்வரம் என கால்நடையாகவே நடந்து இறை தரிசனம் தரிசனம் செய்து மகிழ்ந்தவர். இவர் தன் குருவாக குமாரசுவாமிகளை ஏற்றுக் கொண்டார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் நல்ல ஆசைகளை கூறி அவர்கள் வாழ்வில் பலம் பெற நல்வழி காட்டினார். திருமலை சமுத்திரம் என்ற கிராமத்தில் 40 ஆண்டு காலம் சுவாமிகள் வாழ்ந்தார். அந்த கிராமம் பிடித்திருந்தது. மருத்துவம் அலோபதி சுவாமிகளுக்கு தெரியும் என்பதால் இவரிடம் ஏராளமான மக்கள் வந்து தங்களின் நோய்களை தீர்த்துக் கொண்டு போவார்கள். . உங்களுக்கும் வைத்தியம் பார்த்த சிறப்பு இவருக்கு உண்டு. ஜோதிடம் மூலம் தன்னை நாடிவரும் மக்களுக்கு எதிர்காலத்தை கணித்துக் கூறி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் வழி காட்டினார். மந்திர சாஸ்திரத்தில் பல்லவராக சுவாமிஜி விளங்கினார். தன்னை நாடிவரும் பக்தர்கள் சிஸ்டர்கள் அனைவருக்கும் எவ்விதமான ஜாதி பாகுபாட்டையும் பாராமல் மந்திர உபதேசங்கள் வழங்கி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் வல்லமையை வழங்கி விடுவார். அந்த கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம் நிறுவி அதையும் செயல்பட வைத்திருக்கிறார். சாமிக்கு பல ஆசனங்கள் செய்யத் தெரியும். ஆசனங்கள் செய்து தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருப்பார் சுவாமி விவேகானந்தர் வாரியார் சாமிகள் மீது இவருக்கு மிக்க அன்பும் மரியாதையும் உண்டு. திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் தரிசித்து ஆசி பெற்றவர் அடிக்கடி திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை வணங்கி கிரிவலம் செல்வார். 

   திருவண்ணாமலை ஸ்ரீ சேராது சுவாமிகள் மடத்தில் பலமுறை தங்கி இருக்கிறார் இவரின் சித்து விளையாட்டுக்கள் ஏராளம் ஏராளம். திருவண்ணாமலையில் தன்னுடைய இறுதி சமாதி நிலையை20. 01.2013 அடைந்தார். . அவர் என்றும் சூட்சும வடிவில் இருந்து கொண்டு தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். . இவரின் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இவர் இறைநிலை அடைந்த அதாவது சமாதி நிலை அடைந்த நாளை மிகச் சிறப்பாக நினைவு கூறுகிறார்கள். . மகான் ஸ்ரீ ல ஸ்ரீ சாது ஸ்வாமிகள்

அவர்களை வணங்கி நல்வாழ்வு வாழ்வோம் குருவே துணை. . 

 

ந. சண்முகம்

திருவண்ணாமலை.