தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்றவுடன் பலர் மாத்திரைகளை வாங்கி அடிக்கடி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. தலைவலியைப் போக்குவதற்கு எளிய இயற்கை மருத்துவத்தைக் கடைபிடிக்கலாம். இயற்கை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாதது என்பதை கவனத்தைக் கொள்ளுங்கள்.
தலைவலி :
**************** பச்சை கொத்துமல்லி தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
ஒற்றைத் தலைவலி :
*************************
மருதாணி இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் ஒரு ரூபாய் நாணயம் அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும்.
தாங்க முடியாத தலைவலியா? சிறு பயிற்சி.
*********************************************************************
நம் மூக்கில், இரண்டு துவாரங்களை சுவாசிப்பதற்கு (உள்ளே வெளியே) / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும்போது, வலது துவாரத்தை கட்டைவிரலால் மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும். அவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்ய வேண்டும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய்விடும்.
மிகவும் களைப்பாக இருக்கிறதா? எளிய பயிற்சி
**********************************************************************
நாசியின் இடது துவாரத்தை மூடி, நாசியின் வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு நீங்கி விடுவதை உணரலாம்.
-பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை