திருவாரன்விளை (ஆரம்முளா)
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்
மூலவர் : திருக்குறளப்பன் (பார்த்தசாரதி)
தாயார் : பத்மாசனி
தீர்த்தம் : வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆரம்முளா
ஊர் : திருவாறன் விளை
மாவட்டம் : பந்தனம் திட்டா
மாநிலம் : கேரளா
மங்களாசாசனம்:
நம்மாழ்வார்
ஆகுங்கொல் ஐயமொன்றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும் மாகம் திகழ் கொடிமாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ் செய்து கை தொழக் கூடுங் கொலோ.
-நம்மாழ்வார்
திருவிழா:
தைமாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு திருவிழா சிறப்பாக நடைபெறும்.
தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 71 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் அர்ஜுனனர் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலை உள்ளது. இதற்கு தற்போது தங்கக்கவசம் சாற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரம்முளா (திருவாறன்விளை ) - 689 533 பந்தனம்திட்டா மாவட்டம்
கேரளாவின் புகழ் பெற்ற பம்பை நதி இக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக செல்கிறது. பரசுராமருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.