திருக்கடிகை/சோளிங்கர்* (வேலூர் மாவட்டம்)
மூலவர் : யோக ந்ருஸிம்ஹன்
தாயார் : ஸ்ரீ அமிர்தவல்லி
உற்சவர்: அக்காரக்கனி
இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோக நிலையில் உள்ளனர்.
சப்தரிஷிகள் என்று அழைக்கப்படும் வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகியோருக்கு, நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண வேண்டும் என்று, இத்தலத்துக்கு வந்து, திருமாலை நோக்கி தவம் இருந்தனர்.
ரிஷிகளின் தவத்தை மெச்சிய திருமால் அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி அளித்தார்.
சோளிங்கர் தலத்தில் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலை (1,305 படிகள்) மீது மூலவரும், அதன் அருகே உள்ள சிறிய மலையில்(406 படிகள்) சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் தரிசனம் முடித்துவிட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (நாழிகை - 24 நிமிடம்) இருந்தாலே மோட்சம் என்பது ஐதீகம்.
சிறிய மலையில் இருந்து பார்த்தால் ஆஞ்சநேயரின் கண்கள், பெரிய மலையில் உள்ள நரசிம்ம மூர்த்தியின் திருவடிகளைப் பார்த்தபடி இருக்கும்.
கீதா ராஜா சென்னை