திருச்செங்குன்றூர்*, ஆலப்புழா கேரளா
மூலவர் : இமையவரப்பன்
தாயார் : செங்கமலவல்லி
நின்ற திருக்கோலம்
இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
தருமர். தனது சகோதரர்களுடன் கேரள பகுதிக்கு வந்தார். இந்த இடத்தருகே வரும்போது இங்கிருந்த பெருமாள் கோயிலைப் புதுப்பித்து வழிபட்டார். சிற்றாற்றில் நீராடி பெருமாளை வழிபட்டதால் அவர் மன அமைதி அடைந்தார். இந்த தலத்தில் மற்றொரு சமயத்தில் தேவர்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இமையவர்கள் என்று அழைக்கப்படும் தேவர்களுக்கு காட்சி அளித்ததால், பெருமாளுக்கு இமையவரப்பன் (தேவர்களின் தந்தை) என்ற திருநாமம் ஏற்பட்டது.
கீதா ராஜா, சென்னை