tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவண்வண்டூர்* (திருவமுண்டூர்), ஆலப்புழா கேரளா

 

மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம்

 

தாயார் - கமலவல்லி நாச்சியார்.

 

நாரதர் - ப்ருஹ்மாவினால் சபிக்கப்பட்டு இவ்விடம் வந்து ஸ்ரீமந் நாராயணனை பூஜித்து பகவானிடமிருந்து தத்வ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற ஸ்தலம். 

'நாரதீய புராணம்’ எனும் நூலினை அங்கேயே அமர்ந்து இயற்றினார் என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்கிறது.

 

பாண்டவர்களில் ஒருவனான நகுலன் இந்தக் கோயிலை புதுப்பித்து வழிபட்டு வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

 

இதனால் இந்தக் கோவிலை இங் கிருப்பவர்கள் ‘நகுலன் கோவில்’ என்றே அழைக்கின்றனர்.

 

கீதா ராஜா சென்னை