திருவனந்தபுரம்* கேரளா
மூலவர்: அனந்த பத்மநாபன்
தாயார்: ஸ்ரீ ஹரிலட்சுமி
சயன திருக்கோலம்
கேரளாவின் தலைநகரான ”திருவனந்தபுரம்” என்பது ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமியின் பூமி என்று பொருள்படுகிறது.
ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் வரலாறு 8ம் நூற்றாண்டை சார்ந்தது.
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது உறவினர்கள், தளபதி என தனது பரிவாரங்களோடு வந்து தன் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ்ஜியம் மற்றும் பிற செல்வங்களை ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கு பட்டயம் எழுதிக்கொடுத்தார்.
பின்னர் தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதி அடைந்தார். அன்று முதல் அந்த அரச பரம்பரையினர் பத்மநாப தாசன் என்று அழைக்கப்படுகின்றனர்
100 அடி உயரத்துடன் 7 நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் திருவனந்தபுரம் கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீ பத்மநாபசுவாமியின் மூல விக்ரஹம் 12008 சாளக்கிராமங்களால் ஆனதாக குறிப்பிடப்படுகிறது, அவை நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக்கரையிலிருந்து எடுத்து வரப்பட்டவையாகும். கர்ப்பகிரஹ மூலஸ்தானம் ஒரு கல்மேடையில் அமைந்துள்ளது, மூலவிக்ரகம் அதன் மேல் 18 அடி நீளத்திற்கு இருக்கிறது. மூலவர் ஸ்ரீ அனந்த பத்மநாபனின் திருமேனி மிகவும் பெரியது என்பதால் அவரது சிரம், உடல், திருவடிகள் ஆகியவற்றை 3 வாசல்கள் வழியே தனித்தனியே தரிசிக்க வேண்டும்.
கீதா ராஜா சென்னை