திருவண்பரிசாரம்* கன்னியாகுமரி
பெருமாள்-திருவாழ்மார்பன்
தாயார்-கமலவல்லி நாச்சியார்
அமர்ந்த திருக்கோலம்
நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம் அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியன் மகனான பிரகலாதன் நரசிம்மனை துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக் கொண்டார். அந்த கோலத்தில் குடிகொண்டது தான் இந்த கோவில் என்கிறார்கள். லட்சுமியை மார்பிலே இருத்திக் கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார்.
திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது இந்த திவ்ய தேசத்தின் பெயர்.
கீதா ராஜா சென்னை