திருக்குறுங்குடி*, திருநெல்வேலி
பெருமாள்: வைஷ்ணவ நம்பி
தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார்
நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்துக்கு குரங்கச் க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் ‘குறுங்குடி’ ஆனது.
கீதா ராஜா சென்னை