tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருத்துலைவில்லி மங்கலம்*, தூத்துக்குடி

 

மூலவர்: அரவிந்த லோசனர்

உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்

தாயார்: கருந்தடங்கண்ணி

 

 இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. 

 

*அரவிந்தலோசனன் திருக்கோயில்*

 

தினந்தோறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர். இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொணர்கிறார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் காரணம் வினவினார். செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பவும் கூறினார் பெருமாள்.

 

இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு கோயில்,கேது அம்சம்.

 

 *தேவர்பிரான் திருக்கோயில்*

 

ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.

 

பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.

 

இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் தெற்கு கோயில், ராகு அம்சம்.

 

கீதா ராஜா சென்னை