திருக்குளந்தை*, தூத்துக்குடி
மூலவர்: வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்
நின்ற திருக்கோலம்
உற்சவர்: மாயக் கூத்தர்
தாயார்: அலமேலு மங்கை, கமலாவதி, குளந்தைவல்லித் தாயார்
நவத்திருப்பதிகளுள், இத்தலம் சனி பகவானுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது.
ஒருசமயம் சோரன் என்ற அரக்கன் வந்து வேதசாரரின் மனைவி குமுதவதையை கவர்ந்து செல்கிறான். செய்வதறியாது தவித்த வேதசாரர், தான் வணங்கும் ஸ்ரீநிவாசனிடம் இதுகுறித்து விண்ணப்பிக்கிறார்.
பக்தரின் குரலுக்கு ஓடோடி வந்த திருமால் அவனை வீழ்த்தி, அவன் மேல் நாட்டியமாடி அழித்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாயக்கூத்தன் என்ற திருநாமத்தை ஏற்றார். சோர நாட்டியன் என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். கருடாழ்வார் இத்தல பெருமாளுடன் அருகே உற்சவராக எழுந்தருளியுள்ளார்.
கீதா ராஜா சென்னை