தென் திருப்பேரை*, தூத்துக்குடி
பெருமாள் : மகர நெடுங்குழைநாதர், நிகரில் முகில்வண்ணன்
தாயார்: திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம்
எம்பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார்.
நவ திருப்பதிகளில், இது சுக்கிரன் தலம். இக்கோவிலில், கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறு பிள்ளைகள் விளையாடும் ஒலிகளையும் பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் கருடன் சற்று விலகி அமைந்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது.
கீதா ராஜா சென்னை