ஆழ்வார்திருநகரி* (திருக்குருகூர்), தூத்துக்குடி
மூலவர்: ஆதிநாதன்
நின்ற திருக்கோலம்
தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
நவதிருப்பதியில் ஒன்று
தாமாகத் தோன்றிய பெரிய திருமேனியுடைய மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீஹம்.
நம்மாழ்வார் அவதாரத் தலம்.
பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
இந்திரன் தன் மாதா பிதாக்களை உபசரிக்காமல் சபிக்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு சாபவிமோசனம் அடைந்ததாக புராண வரலாறு.
நம்மாழ்வார் ஹம்ஸவானத்தில் எழுந்தருளுவது விசேஷம்.
கீதா ராஜா சென்னை