tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திரு அயோத்தி*, பைசாபாத்

 

ரகு நாயக்கன் (ஸ்ரீ ராமர்), சீதாதேவி

 

முக்தி அளிக்கும் 7 தலங்களில் (அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி)) ஆகியவற்றில் அயோத்தியே முதன்மையாக கருதப்படுகிறது.

 

தேவர்களே ராம அவதாரத்துக்கு வழிசெய்யும் வகையில் இவ்வூரை நிர்மாணம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

 

மனித குல முதல்வரான மனு, இந்த ஊரைக் கட்டியதாக கூறப்படுகிறது.

 

மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பகீரதன் ஆகியோர் அயோத்தி மாநகரை ஆண்டனர். அவர்களின் காலத்துக்குப் பிறகு பகீரதனின் பேரன் தசரதன் ஆட்சி புரிந்து வந்தார். 

 

ஸ்ரீ ராமர் பிறப்பு முதல் ராமபிரான் வெற்றி வாகை சூடி சீதா பிராட்டியுடன் அயோத்தி திரும்புதல், ஸ்ரீராம பட்டாபிஷேகம் என்று ராமபிரானின் வாழ்க்கைப் பயணம் இங்கே தொடர்கிறது.

 

ராமபிரானும், சீதா பிராட்டியும் அயோத்தியில் எழுந்தருளி ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

 

கீதா ராஜா சென்னை