tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

பிரயாகை*(கண்டங்கடி நகர்),உத்தராஞ்சல்

 

மூலவர்: நீலமேகப் பெருமாள், ரகுநாத்ஜி (நின்ற திருக்கோலம்)

தாயார்: புண்டரீகவல்லி, விமலா

 

 பிரம்மதேவர் இங்கு யாகம் செய்ததால், இவ்விடம் பிரயாகை என்றும், திருமாலை தேவனாகக் கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால், தேவப்பிரயாகை என்றும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்த வேளையில் திருமாலை வணங்குவதால் தேவப்பிரயாகை என்று இத்தலம் பெயர் பெற்றது.

 

இத்தலத்தில் உள்ள ஆலமரம் ஊழிக் காலத்திலும் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில்தான் திருமால் குழந்தையாகப் பள்ளி கொள்வார் என்றும் மத்ஸ்ய புராணம் கூறுகிறது. இத்தலத்தின் மூலவரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார்

 

ஹரித்வாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 5 புண்ணிய சங்கமங்கள் உள்ளன. அலக்நந்தா (பச்சை) நதியுடன் பாகீரதி (பழுப்பு) நதி சங்கமமாகும் தேவப்பிரயாகை, தேவப்பிரயாகையும் நந்தாகினியும் சங்கமிக்கும் ருத்ரப் பிரயாகை, அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் கர்ணப்பிரயாகை, கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப் பிரயாகை, இவற்றுடன் நந்தாகினி நதி சேரும் நந்தப் பிரயாகை என்று பஞ்ச பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்பவர்கள் இங்கு நீராடிச் செல்வது வழக்கம். 

 

கீதா ராஜா சென்னை