tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

அகோபிலம்* , சிங்கவேள்குன்றம், கர்னூல் ஆந்திரா

 

மூலவர் : மலையடிவாரக் கோயிலில் பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மர்

 

 மலைக்கோயிலில் அகோபில நரசிம்மர் 

 

 உற்சவர் : மலையின் மேலும், மலையின் கீழுமாக 9 உற்சவ மூர்த்திகள்

 

தாயார் : மலை அடிவாரக் கோயிலில் அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி

 

 மலைக்கோயிலில் லட்சுமி 

 

பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனின் வயிற்றைக் கிழித்தது, ஆக்ரோஷமாக கர்ஜித்தது, பிரகலாதனுக்காக சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற, நரசிம்ம அவதாரத்தின் 9 கோலங்கள் இத்தலத்தில் அமையப் பெற்றுள்ளன.

 

கருடன் தவம் இருந்ததால் இம்மலை கருடாத்ரி என்றும் கருடாச்சலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

அகோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. சிங்க வேல் குன்றம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படும் இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 

மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட ‘உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது.

 

மலையின் மேலும் கீழுமாக 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. அதனால் இத்தலம் நவ நரசிம்ம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 

*மலையின் கீழ்* உள்ள அகோபிலத்தில் பார்கவ நரசிம்மர் (சூரியன்), யோகானந்த நரசிம்மர் (சனி), சக்ரவட நரசிம்மர் (கேது) கோயில்கள் அமைந்துள்ளன. 

*மலையின் மேல்* உள்ள அகோபிலத்தில் அகோபில நரசிம்மர் (குரு), வராக நரசிம்மர் (குரோதா நரசிம்மர் - ராகு), மாலோல நரசிம்மர் (வெள்ளி), ஜூவாலா நரசிம்மர் (செவ்வாய்), பாவன நரசிம்மர் (புதன்), காரஞ்ச நரசிம்மர் (திங்கள்) கோயில்கள் உள்ளன.

 

கீதா ராஜா சென்னை