திருவைகுந்த விண்ணகரம்*/நாங்கூர் (சீர்காழி)
மூலவர்: வைகுண்ட நாதர், தாமரைக் கண்ணன்
தாயார்: வைகுந்த வல்லி
கோலம்: அமர்ந்த திருக்கோலம்
பெருமாள் வைகுண்டநாதன் சாளக்கிராம கல்லினால் உருவானவர்.
திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் ஒன்றாக போற்றப்படும் இத்தலத்தில், பெருமாள் சங்கு சக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.
வைகுண்டத்தில் தேவர்களுக்கு திருமால் காட்சியளிப்பதுபோல் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பரமபதத்துக்கு சமமான தலமாக கருதப்படுகிறது.
மூலவர் தாமரை பீடத்தின் மீது வலது காலை மடக்கி குத்திட்டு வைத்து இடது காலை தொங்கவிட்டு, இடது கரத்தை அரவத்தின் மீது வைத்தும், பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரம் ஏந்தியும், பின்புறம் ஐந்து தலை ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில், அருள்பாலிக்கிறார்.
தரிசிக்கலாம் ??
கீதா ராஜா சென்னை