திருவாலி – திருநகரி* (சீர்காழி)
திருவாலி திருநகரி இரண்டும் தனித்தனி கோவில்கள், ஆனால் ஒரே திவ்யதேசமாகவே கருதப்படுகிறது
*திருவாலி*
மூலவர்: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்)
உற்சவர்: திருவாலி நகராளன்
தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில் இரட்டைத் தலங்களாக, (ஒரே திவ்ய தேசமாக) 34-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
லட்சுமியுடன் நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.
*திருநகரி*
மூலவர்: வேதராஜன்
உற்சவர்: கல்யாண ரங்கநாதர்
தாயார்: அமிர்தவல்லி
பிரம்மதேவரின் மகனான கர்த்தம பிரஜாபதி, மோட்சம் வேண்டி, பெருமாளை நோக்கி தவம் இயற்றினான். இவனுக்கு தரிசனம் தருவதில் தாமதம் ஏற்பட்டது, இதனால் வருத்தம் அடைந்த திருமகள், பெருமாளிடம் கோபித்துக் கொண்டு, குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் ஒளிந்து கொண்டார். பெருமாள் திருமகளைத் தேடி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்.
திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் பெருமாள் அருள்பாலிப்பதால், இரண்டு தலங்களையும் சேர்த்து இரட்டைத் தலங்கள் (திருவாலி – திருநகரி) என்று அழைக்கப்படுகின்றன.
தரிசிக்கலாம் ??
கீதா ராஜா
சென்னை